யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
தெற்காசியா கவலையளிக்கும் பகுதியாக உள்ளது : ஒபாமா
வாஷிங்டன் (ஏஜென்சி), புதன்கிழமை, 3 டிசம்பர் 2008   ( 13:56 IST )
தெற்காசியா பிராந்தியம் கவலையளிக்கும் ஒரு குதியாக மாறி வருகிறது என்று அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள பராக் ஒபாமா கூறியுள்ளார்.

அடுத்த மாதம் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள ஒபாமா,தனது நாட்டு தேசிய பாதுகாப்புக் குழுவை அறிவித்த பின்னர் கூறியதாவது :

பயங்கரவாதிகளை முறியடிக்க ராணுவம் மட்டுமல்லாது, பொருளாதார, அரசியல் மற்றும் ராஜதந்திர ஆற்றல்களையும் முழு வீச்சுடன் பயன்படுத்தப்படும்.இது போன்ற நடவடிக்கை, அமெரிக்காவிற்கு மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்திற்கும் அமைதியை ஏற்படுத்துவதாய் அமையும்.

மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை பார்க்கும்போது,தெற்காசியப் பகுதி கவலையளிக்கும் ஒரு பகுதியாக மாறி வருகிறது. ஆப்கானிலும், தெற்காசியாவின் பிற பகுதிகளிலும் பயங்கரவாதிகள் பாதுகாப்பாக இயங்கி வருவது அமெரிக்க மக்களின் பாதுகாப்புக்கு எதிரான முக்கியமான ஒரே அச்சுறுத்தலாக திகழ்ந்து வருவது கவலையளிப்பதாக உள்ளது.

எங்களது ஆதாரங்களையெல்லாம் திரட்டி, அல்க‌ய்டா, ஒசாமா பின்லேடன், அமெரிக்க மக்களை குறி வைக்கும் பிற பயங்கரவாத சக்திகளை ஒழிக்க கவனம் முழுவதையும் செலுத்துவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மும்பை தாக்குதலை நடத்தியவர்கள் தேசமற்றவர்கள் : ஜர்தாரி
மும்பை தாக்குதல் குறித்து கூ‌ட்டு‌ப் புலனா‌ய்வுக்கு தயா‌ர்: பா‌கி‌ஸ்தா‌ன்
மும்பை தாக்குதல்: முன்கூட்டியே எச்சரித்த யு.எஸ்.
இந்தியா தாக்குதல் நடத்தினால் ஆதரவு : ஒபாமா
கொக்கவில் நகரை பிடித்தது இலங்கை ராணுவம்!
தைவனில் கடும் நிலநடுக்கம்
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...