|
| மும்பை தாக்குதலை நடத்தியவர்கள் தேசமற்றவர்கள் : ஜர்தாரி |
| வாஷிங்டன் (ஏஜென்சி), 3 டிசம்பர் 2008 ( 13:27 IST ) | |
மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் எந்த ஒரு நாட்டையும் சாராத 'தேசமற்றவர்கள் ' என்று பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் அலி ஜர்தாரி கூறியுள்ளார்.
சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள அவர், மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளதாக கூறப்படுவதை மறுத்துள்ளார்.
மும்பையில் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் பயங்கரவாதி, பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அந்த பயங்கரவாதிக் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்பதை நான் நம்பவில்லை,.இது தொடர்பான உறுதியான ஆதாரம் எதையும் இந்தியா அளிக்கவில்லை.
இதுபோன்ற ( மும்பை ) தாக்குதலில் ஈடுபடுபவர்கள் உலகம் முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களெல்லாம் எந்த ஒரு நாட்டையும் சாராத தேசமற்றவர்கள் என்றே நான் கருதுகிறேன்.
மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியாவுடன் இணைந்து கூட்டு புலனாய்வில் ஈடுபட பாகிஸ்தான் பாதுகாப்பு படை அதிகாரிகளை அனுமதிக்க நான் தயாராக உள்ளேன்.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ராணுவ தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதா எனக் கேட்கப்படுகிறது.அதில் எனக்கு உடன்பாடு இல்லை.ஏனெனில் இந்த தாக்குதல் தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து கூட்டு புலனாய்வு நடத்தி, பிரச்சனையை கண்டறிய வேண்டிய தருணம் இது.
மும்பை தாக்குதல் சம்பவம், இந்தியா - பாகிஸ்தான் இடையே நான்காவது போருக்கு வழி வகுக்குமா என்றும் கேட்கப்படுகிறது.ஜனநாயகவாதிகள் போரில் ஈடுபடுவதில்லை.நீங்கள் கூறும் போர் நடைபெற்றதெல்லாம், எந்த ஒரு ஜனநாயக அரசும் இருந்தபோது நடைபெற்றதில்லை.அவையெல்லாம் சர்வாதிகாரிகள் ஆட்சியிலிருந்தபோதுதான் நடைபெற்றது.
பயங்கரவாதத்தினால் பாகிஸ்தானும்தான் பாதிக்கப்பட்டுள்ளது.நானேகூட பாதிக்கப்பட்டுள்ளேன்.பயங்கரவாதத்தினால் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே பாதிக்கப்பட்டுள்ளன.இந்தியர்களுக்காக நான் வருந்துகிறேன். என ஜர்தாரி அந்த பேட்டியில் மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|