|
| மும்பை தாக்குதல்: முன்கூட்டியே எச்சரித்த யு.எஸ். |
| வாஷிங்டன் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 டிசம்பர் 2008 ( 14:56 IST ) | |
மும்பையில் கடல் மார்க்கமாக ஊடுருவி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என ஒரு மாதத்துக்கு முன்னரே இந்திய உளவுத்துறையை அமெரிக்க உளவுத்துறை எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பையில் கடந்தவாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 183 பேர் பலியாகினர். 150க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் உலக நாடுகளையே கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
மத்திய மாநில அரசுகளின் மெத்தனம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக பல்வேறு தரப்பிலும் அதிருப்தி எழுந்துள்ளது.
இதனால், இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல், மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் ஆர்.ஆர். பாட்டீல் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கும் தனது ராஜினாமாவை சூசகமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மும்பை நகருக்குள் கடல்வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுத்துறை, இந்திய உளவுத்துறையை ஒரு மாதத்துக்கு முன்னரே எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, உடனடியாக மும்பை ஓட்டல்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டதாகவும், பின்னர் அந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் படிப்படியாக குறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மும்பையில் தாக்குதல் நடந்த அன்று கூட, பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் படகுகளில் இருந்து இறங்குவதை சில மீனவர்கள் பார்த்து, போலீசுக்கு தெரிவித்துள்ளனர்.
எனினும், போலீசார் அதை அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் பின்னரே, குலை நடுங்கவைக்கும் கொலைவெறித் தாக்குதல்களை பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர்.
இந்த தகவல்களை அமெரிக்காவை சேர்ந்த தொலைகாட்சி சேனல் ஒன்று தெரிவித்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|