யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
இந்தியா தாக்குதல் நடத்தினால் ஆதரவு : ஒபாமா
வாஷிங்டன் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 டிசம்பர் 2008   ( 13:23 IST )
'மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தான் காரணம் என்று ஆதாரப்பூர்வமாக தெரியவந்தால் அந்நாட்டிலுள்ள தீவிரவாபயிற்சி முகாம்கள் மீது தாக்குதல் நடத்த இந்தியாவுக்கு உரிமையுள்ளது' என்று அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா கூறியுள்ளார்.

கடந்த வாரம் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக நாடுகளையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா கூறியதாவது:

எந்த ஒரு நாடும் தனது இறையாண்மையை பாதுகாத்து கொள்வதற்காக தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபடலாம்.

மும்பை பயங்கரவாதம் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா நிர்வாகம் துணை நிற்கும்.

நானும், எனது குழுவினரும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் உறுதி பூண்டுள்ளோம். எந்த வகையில் பயங்கரவாதம் தலைதூக்கினாலும் அதை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும்.

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், அந்நாட்டில் செயல்படும் தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம்.

இந்த தாக்குதலை நடத்தியவர்களை கண்டுபிடித்து அவர்களை தண்டிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு அமெரிக்கா ஆதரவு தரும். இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கொக்கவில் நகரை பிடித்தது இலங்கை ராணுவம்!
தைவனில் கடும் நிலநடுக்கம்
ஹிலாரிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி: ஒபாமா
மும்பை தாக்குதல் : பாக். ஒத்துழைக்க யு.எஸ்.அறிவுறுத்தல்
பாக். மீது குற்றம் சாட்ட வேண்டாம்: ஜர்தாரி
பாக்.கில் தற்கொலைத் தாக்குதல் : 7 பேர் பலி
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...