|
| கொக்கவில் நகரை பிடித்தது இலங்கை ராணுவம்! |
| கொழும்பு (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 டிசம்பர் 2008 ( 13:15 IST ) | |
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து முல்லைத்தீவின் முக்கிய பகுதியான கொக்கவில் நகரை கைப்பற்றியுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் ராணுவத்துக்கு இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்பதற்காக ராணுவம் படிப்படியாக முன்னேறி வருகிறது.
புலிகளின் அரசியல் பிரிவு தளமாக திகழும் கிளிநொச்சியை பிடிக்க ராணுவம் கடும் முயற்சி செய்துவருகிறது.
இது, கடந்த 1990ம் ஆண்டிலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதியின் தலைமை இடமாக கொக்கவில் நகரம் உள்ளது.
நேற்று முன் தினம் தொடங்கி, இரு தினங்களாக நடந்த சண்டையின் முடிவில், கொக்கவில் நகரை பிடித்துவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
ராணுவத்தினர் 57வது படைப்பிடிவினர் கொக்கவில்லை பிடித்துவிட்டதாகவும், யாழ்ப்பாணம்-கண்டி சாலையின் கிழக்கே வெகுதூரம் வரை ராணுவம் முன்னேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாங்குளம் வரை உள்ள புலிகளின் அனைத்து முக்கிய தளங்களும் தற்போது தங்களது வசம் வந்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
18 ஆண்டு கால போராட்டத்துக்குப் பின்னர் இந்த நகரை தாங்கள் கைப்பற்றியிருப்பது, தங்களது போராட்டத்தில் மிக முக்கியமான ஓர் மைல் கல் என்றும் ராணுவ அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|