|
| தைவனில் கடும் நிலநடுக்கம் |
| தைபேயி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 டிசம்பர் 2008 ( 12:01 IST ) | |
தைவானின் தென் கிழக்குப் பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு அங்குள்ள மக்களை பீதிக்கு உள்ளாக்கியது.
தாய்டுங் நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானதாக தாய்லாந்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் இந்த நிலநடுக்கம் 5.2 ரிக்டராக இருந்ததாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தாய்டுங் நகரில் கட்டிடங்களும், வீடுகளும் குலுங்கின. இதையடுத்து மக்கள் அதிர்ச்சியுடன் திறந்த வெளிப்பகுதிகளுக்கு விரைந்தனர்.
இன்றைய நிலநடுக்கத்தின் தாக்கம் 150 கி.மீ. தொலைவில் உள்ள தைபேயி நகரிலும் உணரப்பட்டது. எனினும் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|