யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பாக். மீது குற்றம் சாட்ட வேண்டாம்: ஜர்தாரி
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 1 டிசம்பர் 2008   ( 19:00 IST )
மும்பையில் நடந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் அரசு மீது இந்தியா குற்றம் சாட்ட வேண்டாம் என அந்நாட்டின் அதிபர் யூசுப் அலி ஜர்தாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர், மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்காக பாகிஸ்தானை தண்டிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாதக் குழுக்களே காரணம் என விசாரணையில் தெரிய வந்தாலும், அதற்காக பாகிஸ்தான் அரசை இந்தியா குற்றம்சாட்டக் கூடாது என பிரதமர் மன்மோகன் சிங்கை தாம் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத வல்லமை படைத்த இரு நாடுகளிடையே மீண்டும் போரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பயங்கரவாத சக்திகள் செயல்படுகின்றன.மும்பை தாக்குதலில் லஷ்கர்-இ -தொய்பாவுக்கு தொடர்பிருப்பதாக தெரியவந்தாலும், அவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு போராடி வருவதையும் இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீதான தாக்குதல் மற்றும் ஈராக்கில் போர்ச் சூழலை ஏற்படுத்திய தீவிரவாத அமைப்புகள், அதேபோல் இந்தியா-பாகிஸ்தான் இடையே போரை ஏற்படுத்தும் நோக்கில் மும்பையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இத்தருணத்தில் இருவரும் ஒன்றாக ஓர் அணியில் நின்று பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும் என்று அந்த பேட்டியில் ஜர்தாரி மேலும் கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாக்.கில் தற்கொலைத் தாக்குதல் : 7 பேர் பலி
பாகிஸ்தானில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்
இந்தியா வருகிறார் காண்டலீசா ரைஸ்
எல்லையில் படைக்குவிப்பா? பாக். மறுப்பு
போர் மூளுமா? இந்தியா- பாக். எல்லையில் பதற்றம்
பயங்கரவாத ஒழிப்பு : மன்மோகனிடம் ஒபாமா உறுதி
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...