|
| இந்தியா வருகிறார் காண்டலீசா ரைஸ் |
| வாஷிங்டன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 1 டிசம்பர் 2008 ( 12:43 IST ) | |
மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பின் உருவாகியுள்ள நிலைமை குறித்து விவாதிப்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலீசா ரைஸ் இந்த வாரம் இந்தியாவுக்கு வரவுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுடன் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில், அதிபர் புஷ்ஷின் அறிவுரைக்கு ஏற்ப ரைஸ் புதுடெல்லி வரவிருப்பதாக, வாஷிங்டன்னில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதன்படி வரும் புதன் கிழமை அன்று காண்டலீசா ரைஸ் புதுடெல்லிக்கு வருவார் எனத் தெரிகிறது. மும்பை தாக்குதல் தொடர்பான விசாரணையில் இந்தியாவுக்கு எத்தகைய உதவிகளை அமெரிக்காவால் அளிக்க இயலும் என்பது குறித்து இந்தியத் தலைவர்களுடன் அவர் விரிவான ஆலோசனை நடத்துவார் என்று நம்பப்படுகிறது.
தற்போது லண்டனில் உள்ள காண்டலீசா ரைஸ், செவ்வாயன்று பிரஸெல்ஸில் நடைபெறும் நேட்டொ மாநாட்டில் பங்கேற்ற பின்னர், இந்தியாவுக்கு புறப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உட்பட 183 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டித்த அதிபர் புஷ், புலனாய்வு விசாரணையில் இந்தியாவுக்கு உதவ விருப்பம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|