|
| எல்லையில் படைக்குவிப்பா? பாக். மறுப்பு |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 1 டிசம்பர் 2008 ( 12:00 IST ) | |
இந்திய எல்லைப் பகுதியில் கூடுதலாக ராணுவத்தை குவித்து வருவதாக வெளியான தகவல்களை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் உள்நாட்டு சேவை அமைப்பு மூத்த அதிகாரி மேஜர் ஜெனரல் அக்தர் அப்பாஸ் கூறுகையில், இந்திய எல்லைப் பகுதியில் ஒரு லட்சம் படை வீரர்களை அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் ஆதாரமற்றது என்றார்.
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து இந்திய எல்லைப் பகுதிக்கு படை வீரர்களை பாகிஸ்தான் மாற்றவில்லை என்ற அவர், இது தொடர்பாக ஊடகங்கள் யூகங்கள் அடிப்படையில் செய்தி வெளியிட்டுள்ளன என்றார்.
எனினும், பிரதமர் கிலானி தனது ஹாங்காங் பயணத்தை ரத்து செய்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதை அக்தர் அப்பாஸ் ஒப்புக் கொண்டார்.
மும்பைத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து தன் மீது இந்தியா போர் தொடுக்கும் என்ற அச்சம் காரணாக, எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் கூடுதலாக ராணுவத்தை குவிக்கத் திட்டமிட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|