யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
போர் மூளுமா? இந்தியா- பாக். எல்லையில் பதற்றம்
புதுடெல்லி/ இஸ்லாமாபாத் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2008   ( 13:50 IST )
மும்பை தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், இந்திய எல்லையில் கூடுதல் படைகளை நிறுத்த அந்நாடு தீர்மானித்துள்ளது. இதனால் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மும்பையில் கொடூர தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் பின்னணியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு செயல்பட்டதற்காக சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் வழக்கம்போல் மறுத்துள்ளது.

ஆனால் இந்த விவகாரம், இரு நாடுகள் இடையிலான உறவை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகக் கூறி, ஐஎஸ்ஐ தலைவர் ஷூஜா பாஷாவை டெல்லிக்கு அனுப்புவதாக முதலில் கூறிய பாகிஸ்தான், பின்னர் திடீரென தனது நிலையில் இருந்து பின் வாங்கியது. இதனால் இந்தியா கடும் அதிருப்தியில் உள்ளது.

இந்த பின்னணியில், மும்பை குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி நேற்று மட்டும் இரண்டு முறை ராணுவ உயரதிகாரிகளை அவசரமாக அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

தலைமைத் தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானி உள்ளிட்ட மூத்த ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், மும்பைத் தாக்குதலுக்குப் பின் எழுந்துள்ள சூழ்நிலைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மும்பை தாக்குதலுக்குப்பின் இரு நாடுகள் இடையே எழுந்துள்ள பதற்றமான சூழலை எதிர்கொள்ள ராணுவம் தயாராக இருப்பதாக, பாகிஸ்தான் அதிபரிடம் ராணுவத் தளபதிகள் உறுதி அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள சுமார் 1 லட்சம் ராணுவத்தினரை இந்திய எல்லையில் நிறுத்தவும் பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக, அங்குள்ள தொலைக்காட்சிகளை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

மும்பை தாக்குதலால் எந்த நேரத்திலும் இந்தியா தன்னை தாக்கக்கூடும் என்று கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக எல்லைக்கு ராணுவத்தை அனுப்ப பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக அந்த தகவல் மேலும் கூறுகிறது.

எல்லையில் பாகிஸ்தான் கூடுதல் படைகளை குவிக்கத் தொடங்கினால் பதிலுக்கு இந்தியாவும் தனது ராணுவத்தை அங்கு அதிக அளவில் நிறுத்தும் என்பதால் எல்லையில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பயங்கரவாத ஒழிப்பு : மன்மோகனிடம் ஒபாமா உறுதி
மும்பை தாக்குதல் பின்னணியில் யார் ? : யு.எஸ் தகவல்
ஐஎ‌ஸ்ஐ தலைவ‌ரை இ‌ந்‌தியாவுக்கு அனுப்ப மறுக்கும் பாக்.!
மு‌ம்பை தா‌க்குத‌லி‌ல் தொட‌ர்பா?: பா‌க். மறு‌ப்பு!
மும்பை தாக்குதல்: உலக நாடுகள் கண்டனம்
மு‌ம்பை தா‌க்குத‌ல்: அமெ‌ரி‌க்கா கடு‌ம் க‌ண்டன‌ம்
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...