|
| பயங்கரவாத ஒழிப்பு : மன்மோகனிடம் ஒபாமா உறுதி |
| வாஷிங்டன் / புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 29 நவம்பர் 2008 ( 18:12 IST ) | |
பயங்கரவாதத்தை முறியடிப்பதில் இந்தியாவோடு அமெரிக்கா இணைந்து நிற்கும் என்று அந்நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா கூறியுள்ளார்.
இன்று பிரதமர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பராக் ஒபாமா,மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள அனைவரின் குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
அப்போது அடியோடு வெறுக்கத்தக்க கொள்கையான பயங்கரவாதத்தை முறியடிப்பதில் இந்தியாவோடு அமெரிக்கா இணைந்து நிற்கும் என்று உறுதியளித்தார்.
முன்னதாக அவர் விடுத்து அறிக்கையில்," அப்பாவி மக்களைக் குறிவைத்துக் கொல்லும் பயங்கரவாதிகளால் இந்தியாவின் ஜனநாயகத்தையோ, அவர்களை முறியடிப்பதற்காக ஒன்றுபட்டு நிற்கும் சர்வதேசத்தையோ முறியடிக்க முடியாது.
பயங்கரவாதத்தை முறியடிப்பதில் இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து நிற்க வேண்டும். பயங்கரவாதிகளின் தொடர்புகளை அழிப்பதிலும், அவர்களின் வெறுக்கத்தக்க கொள்கைகளை தோல்வியுறச் செய்வதிலும் எல்லா நாடுகளும் மக்களும் உறுதியாக நிற்க வேண்டும் .
ஒரு நேரத்தில் ஒரு அதிபர்தான் இருக்க வேண்டும். இந்த சோகமான நேரத்தில் இந்தியாவிற்கு உதவுவதிலும், அமெரிக்கக் குடிமக்களைக் காப்பதிலும் ஜார்ஜ் புஷ் நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழுமையான ஆதரவைத் தருவோம்.
மும்பை நிலவரத்தை நான் முழுமையாகக் கவனித்து வருகிறேன், எனது அதிகாரிகள் உடனுக்குடன் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.இந்தியத் தூதர் ரோனன் சென்னுடன் நான் தொடர்ந்து பேசி வருகிறேன் " என்று அந்த அறிக்கையில் ஒபாமா கூறியிருந்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|