யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
மும்பை தாக்குதல் பின்னணியில் யார் ? : யு.எஸ் தகவல்
வாஷிங்டன் (ஏஜென்சி), சனிக்கிழமை, 29 நவம்பர் 2008   ( 18:00 IST )
மும்பையில் நடந்த யங்கரவாதத் தாக்குதலுக்கு காஷ்மீரில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுவான லஷ்கர்- இ - தொய்பா அமைப்பு காரணமாக இருக்கலாம் என அமெரிக்கா தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்ததாக 'நியூயார்க் டைம்ஸ் ' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து உறுதியாகத் தெரியவில்லை என்ற போதிலும், இதுதொடர்பாக கடந்த 2 நாட்களாக சேகரித்த தகவல்களின்படி லஷ்கர்-இ - தொய்பா அல்லது ஜெய்ஷ்-ஈ-முகமது அமைப்பிற்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அந்த அதிகாரிகள் கூறியதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே மும்பை தாக்குதலுக்கு காரணமாகக் கூறப்படும் அமைப்புகளில் ஒன்றான லஷ்கர்- இ - தொய்பா இதனை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஐஎ‌ஸ்ஐ தலைவ‌ரை இ‌ந்‌தியாவுக்கு அனுப்ப மறுக்கும் பாக்.!
மு‌ம்பை தா‌க்குத‌லி‌ல் தொட‌ர்பா?: பா‌க். மறு‌ப்பு!
மும்பை தாக்குதல்: உலக நாடுகள் கண்டனம்
மு‌ம்பை தா‌க்குத‌ல்: அமெ‌ரி‌க்கா கடு‌ம் க‌ண்டன‌ம்
' இல‌ங்கை‌யி‌ல் ம‌னித உ‌ரிமை ‌மீற‌ல்க‌ள் அதிகரிப்பு '
பிரபாகரன் உத்தரவு : பிறந்த நாள் விழா ரத்து
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...