யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஐஎ‌ஸ்ஐ தலைவ‌ரை இ‌ந்‌தியாவுக்கு அனுப்ப மறுக்கும் பாக்.!
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), சனிக்கிழமை, 29 நவம்பர் 2008   ( 13:57 IST )
மு‌ம்பை பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌ல் ‌விசாரணை தொட‌ர்பாக, பாகிஸ்தானின் உ‌ள்நா‌ட்டு‌ப் புலனா‌ய்வு அமை‌ப்பான ஐஎ‌ஸ்ஐ‌யி‌ன் தலைவ‌ரை இ‌ந்‌தியா‌வுக்கு அனு‌ப்‌ப பாகிஸ்தான் அரசு தற்போது திடீரென மறுத்துள்ளது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு உதவ, 'பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தலைவர் ஷுஜா பாஷாவை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும்' என இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானியிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு, கிலானியும் ஒப்புக்கொண்டிருந்தார். ஷுஜா பாஷா வருகை மூலம் சில முக்கிய தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும் என மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஷூஜா பாஷாவுக்கு பதிலாக ஐஎஸ்ஐ அமைப்பினர் உறுப்பினர் ஒருவரை இந்தியாவுக்கு அனுப்பவுள்ளதாக பாகிஸ்தான் திடீர் பல்டி அடித்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, ராணுவத் தளபதி பர்வேஸ் கயானி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி ஆகியோர் நடத்திய அவசர பேச்சுவார்த்தையில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மு‌ம்பை தா‌க்குத‌லி‌ல் தொட‌ர்பா?: பா‌க். மறு‌ப்பு!
மும்பை தாக்குதல்: உலக நாடுகள் கண்டனம்
மு‌ம்பை தா‌க்குத‌ல்: அமெ‌ரி‌க்கா கடு‌ம் க‌ண்டன‌ம்
' இல‌ங்கை‌யி‌ல் ம‌னித உ‌ரிமை ‌மீற‌ல்க‌ள் அதிகரிப்பு '
பிரபாகரன் உத்தரவு : பிறந்த நாள் விழா ரத்து
சிட்டி வங்கிக்கு நஷ்டம் ஏன் ? சிஇஓ விளக்கம்
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...