|
| மும்பை தாக்குதலில் தொடர்பா?: பாக். மறுப்பு! |
| 29 நவம்பர் 2008 ( 11:35 IST ) | |
மும்பை தாக்குதல்களில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மும்பையில் கடந்த இரு தினங்களாக தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சில தீயசக்திகளுக்குத் தொடர்புள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேசி கூறியதாவது:
இந்த தாக்குதல் சம்பவத்தில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. எங்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். இதனால் அப்பாவி மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
ஓர் தீவிரவாத பிரச்சனையை அரசியலாக்காதீர்கள். இது ஒரு பொதுவான பிரச்சனை. நாம் ஒரு பொதுவான எதிரியைச் சந்தித்து வருகிறோம். இந்த எதிரியை வீழ்த்த நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் பிரதமர் கிலானியும் மறுத்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|