|
| மும்பை தாக்குதல்: உலக நாடுகள் கண்டனம்
|
| வாஷிங்டன் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 27 நவம்பர் 2008 ( 17:05 IST ) | |
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மும்பையில், நேற்றிரவு தொடங்கிய தீவிரவாதிகளின் வெறியாட்டம் இன்றும் தொடர்கிறது. இந்த தாக்குதலில் 14 போலீசார், 6 தீவிரவாதிகள் உள்பட 101 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
உலகையே உலுக்கிய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய மக்கள் ஜனநாயகத்தை விரும்புபவர்கள். அவர்கள் மீது தீவிரவாதச் செயல்களை புகுத்துவது கடும் கண்டனத்திற்குரியது.
இந்தியாவிற்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம். இந்த தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு, அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒபாமா, வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலிசா ரைஸ் ஆகியோர் அமெரிக்காவுக்கான இந்திய தூதரிடம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு அதிபர் புஷ்சும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|