|
| சிட்டி வங்கிக்கு நஷ்டம் ஏன் ? சிஇஓ விளக்கம் |
| நியூயார்க் (ஏஜென்சி), புதன்கிழமை, 26 நவம்பர் 2008 ( 16:20 IST ) | |
அமெரிக்காவின் பிரபல நிதி நிறுவனமான சிட்டி குழும வங்கி கடும் இழப்பை சந்தித்ததற்கு, அந்நிறுவனம் ரியல் எஸ்டேட் துறையில் அதிக அளவு முதலீடு செய்ததே காரணம் என்று அக்குழுமத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள விக்ரம் பண்டிட் தெரிவித்துள்ளார்.
பேட்டி ஒன்றில் இதனை தெரிவித்துள்ள அவர், சிட்டி ,குழுமத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முந்தைய நிர்வாகமே காரணம் என்றார்.
எங்கே தவறு நிகழ்ந்ததோ அங்கே நாங்கள் மிகவும் ஆழமாக கவனம் செலுத்தப்போகிறோம் என்று அவர் அந்த பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.
முன்னதாக 306 பில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்து கடும் நெருக்கடிக்குள்ளான அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான சிட்டி குழுமத்தை காப்பாற்ற அந்நாட்டு ரிசர்வ் வங்கியாக திகழும் பெடரல் வங்கி, முதல்கட்டமாக 20 பில்லியன் டாலர்களை நிதியுதவி அளிக்க உள்ளதாக அறிவித்தது.
இதனையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது நியூயார்க் பங்குச் சந்தையில் சிட்டி குழுமத்தின் பங்கு ஒன்றின் விலை 3.77 டாலராக இருந்த நிலையில், நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது அதன் மதிப்பு 6.08 டாலராக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|