|
| இந்தியாவின் உண்மையான நண்பன் நாங்கள்தான் : எல்டிடிஈ |
| கொழும்பு (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008 ( 18:19 IST ) | |
இந்தியாவின் உண்மையான நண்பன் நாங்கள்தான் என விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பி.நடேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இந்தியாவிலிருந்து வெளியாகும் ஆங்கில வார ஏடு ஒன்றுக்கு இ மெயில் மூலம் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவின் உண்மையான நண்பன் விடுதலைப் புலிகள் இயக்கம்தான் என்றும், புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கைக்கு அளிக்கும் அனைத்து ராணுவ உதவிகளையும் இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்.
புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கவிட்டு எங்களது போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்.எங்களது இயக்கமும், மக்களும்தான் இந்தியாவுக்கு உண்மையான நண்பர்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார்.போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என எங்கள் இயக்கம் விரும்புகிறது.ஆனால் இலங்கை அரசாங்கமோ ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண்பதில்தான் ஆர்வமாக உள்ளது.
போர் நிறுத்தம் மற்றும் அமைதி பேச்சு வார்த்தை மூலம்தான் தீர்வு காண முடியும் என நாங்கள் கூறிவருகிற நிலையில், இலங்கை அரசாங்கமும் ராணுவ தலைவர்களும் ராணுவம் மூலம் தீர்வு காண்பதைத்தான் வலியுறுத்துகின்றனர் என அந்த பேட்டியில் மேலும் கூறியுள்ளார் நடேசன்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|