|
| பாக்.கில் வெடிகுண்டு தாக்குதல்: 6 பேர் பலி |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி, வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008 ( 13:58 IST ) | |
பாகிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் பலியாகினர். 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள ஓர் நகரத்தில் ஷியா பிரிவு முஸ்லிம் மதகுருவான அல்லாமா நாசிர் ஷா நக்வி என்பவர் இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரது இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது, அங்கு திடீரென வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் 6 பேர் பலியாகினர்; 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
எனினும், இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது கையெறி வெடிகுண்டா அல்லது மனித வெடிகுண்டா என்பது பற்றிய உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|