யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
விடுதலை கோரி பாக். அணு விஞ்ஞானி மனு
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008   ( 13:44 IST )
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும், விடுதலை செய்ய உத்தரவிடக் கோரியும் பாகிஸ்தான் அணு ஆயுத விஞ்ஞானி ஏ.க்யூ.கான் உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

பாகிஸ்தான் நாடு அணு ஆயுதத் துறையில் வல்லமை பெறுவதற்கு காரணமாக ஏ.க்யூ.கான் இந்ததாகக் கூறப்படுவதுண்டு. அணு ஆயுத ரகசியங்களை தீவிரவாதிகளுக்கு அளித்ததாகக் கூறி அவர் தற்போது வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், பாகிஸ்தான் அரசு தன்னை பிடித்து வைத்திருப்பதை எதிர்த்தும், விடுதலை கோரியும் கான் தரப்பில் பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் சட்ட அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான எஸ்.எம். ஜாபர் மூலம், கான் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளர். பாதுகாப்பு என்ற பெயரில் தனக்கு அதிகாரிகள் பல கட்டுப்பாடுகளை விதிப்பதாக, அந்த மனுவில் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.விசாரணை எப்போது தொடங்கும் என்பது சில தினங்களில் அறிவிக்கப்படும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காத்மாண்டு: இந்திய தூதர் கார் மீது தாக்குதல்
இலங்கை: மேலும் 2 இடங்களை கைப்பற்றியது ராணுவம்!
தாய் பிரதமர் அலுவலகத்தில் குண்டு வீசி தாக்குதல்
புலிகள் ஆதரவு கட்சிகளுக்கு ராஜபக்சே அழைப்பு!
இலங்கை: நிவாரண‌ப் பொரு‌ட்க‌ள் இ‌ன்று ஒ‌ப்படை‌‌ப்பு!
போலி விசா : மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...