|
| இலங்கை: மேலும் 2 இடங்களை கைப்பற்றியது ராணுவம்! |
| கொழும்பு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008 ( 13:55 IST ) | |
இலங்கையில் விடுதலைப் புலிகளிடம் இருந்து மேலும் 2 முக்கிய பகுதிகளை கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை பிடிக்க ராணுவம் முன்னேறி வருகிறது. இதை தடுக்க புலிகள் தரப்பிலும் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இரு தரப்புக்கும் இடையே, கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் மோதலில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
எனினும், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பூநகரி மற்றும் மாங்குளம் பகுதிகளை கடந்தவாரம் ராணுவம் கைப்பற்றியது. புலிகளின் முக்கியத் தளமான கிளிநொச்சியை பிடிக்கவும் ராணுவம் முயற்சித்து வருகிறது.
இதில், புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம் அருகேயுள்ள முகமலை மற்றும் கிலாலே ஆகிய இடங்களை கைப்பற்றியுள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது.
இதை தடுக்க புலிகள் கடுமையாக போராடியதாகவும், எனினும் அதை ராணுவம் முறியடித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, புலிகள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்படவில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|