யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
தாய் பிரதமர் அலுவலகத்தில் குண்டு வீசி தாக்குதல்
பாங்காக் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008   ( 13:12 IST )
தாய்லாந்து பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை நிகழ்ந்த குண்டு வீச்சு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் ; 23 பேர் காயமடைந்தனர்.

அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் கையெறி குண்டை வீசி இந்த தாக்குதலை நடத்தியதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரசுக்கு எதிரானவர்கள் இதற்கு முன்னர் பல்வேறு குண்டு வீச்சு தாக்குதல்களை நடத்தியிருந்தாலும், பிரதமர் அலுவலகம் மீதே தாக்குதல் நடத்தியிருப்பது இதுதான் முதன் முறையாகும் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

ஜனநாயகத்திற்கான மக்கள் கூட்டணி என்ற பெயரில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள அரசு கட்டட வளாகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஆக்கிரமித்துள்ளனர்.

இதனால் தற்போதைய பிரதமர், தமது அரசு அலுவலகத்திற்குள் நுழைய முடியாமல் பாங்காக் பழைய விமான நிலையத்தில் தனது அலுவலகத்தை அமைத்து செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
புலிகள் ஆதரவு கட்சிகளுக்கு ராஜபக்சே அழைப்பு!
இலங்கை: நிவாரண‌ப் பொரு‌ட்க‌ள் இ‌ன்று ஒ‌ப்படை‌‌ப்பு!
போலி விசா : மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்
விண்ணில் இணையதள சேவை: நாஸா சோதனை வெற்றி
மறைவிடங்களை தேடி தாலிபான்கள் ஓட்டம்
ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதக்குழு அல்ல: பிரிட்டன்
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...