|
| புலிகள் ஆதரவு கட்சிகளுக்கு ராஜபக்சே அழைப்பு! |
| கொழும்பு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008 ( 11:11 IST ) | |
இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக பேச்சு வார்த்தைக்கு வரும்படி விடுதலைப் புலிகள் ஆதரவு கட்சிகளுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகிதா பொகலகாமா, நாடாளுமன்றத்தில் பேசியதாவது:
இலங்கையில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் ராஜபக்சே விரும்புகிறார். இந்த பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண வேண்டும் என, அரசு சார்பில் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது.
அதன்படி, இலங்கை பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பதற்காக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் புலிகள் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டணி ஆகியவற்றின் தலைவர்களுக்கு அதிபர் ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.
தீவிரவாத செயல்களை ராணுவ நடவடிக்கை மூலமே கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை.
அதே நேரத்தில், அரசியல் பிரச்னைக்கு அரசியல் ரீதியாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்பதிலும் ராஜபக்சே உறுதியாக உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|