|
| விண்ணில் இணையதள சேவை: நாஸா சோதனை வெற்றி |
| வாஷிங்டன் (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008 ( 13:17 IST ) | |
விண்வெளியில் தகவல் தொடர்புக்கு உதவும் இணையதள மாதிரியை உருவாக்கி வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்திருப்பதாக அமெரிக்காவின் நாஸா நிறுவனம் அறிவித்துள்ளது.
பூமியின் ஒரு பகுதியில் இருந்து, பல ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள வேறொரு பகுதிக்கு இணையதளம் மூலம் தொடர்பு கொள்வது என்பது இன்று எளிதானது.நொடிப்பொழுதில் இங்கிருந்து அமெரிக்காவில் உள்ளவரைக் கூட முகம் பார்த்து பேச முடியும்.
இந்த விஞ்ஞான சாதனையின் அடுத்த கட்டமாக பூமியில் இருந்து விண்வெளிக்கு இணையதள வலைபின்னல் மூலம் தகவல் பறிமாற்றம் செய்வது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.
தற்போது, இதற்கான மென்பொருளை வடிவமைத்து அதை வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்துள்ளது.
இது குறித்து நாஸாவின் விண்வெளி வலை பின்னல் வடிவமைப்பு விஞ்ஞானி அட்ரியன் ஹூக் கூறுகையில், 'விண்வெளியில் தகவல் தொடர்பு வசதிகள் ஏற்படுத்துவதன் முதல் கட்டமாக இந்த சோதனை அமைந்துள்ளது' என்றார்.
இடையூறு தடுப்பு வலைப் பின்னலாக்கம் (டிஸ்ரப்ஷன் டோலரென்ட் நெட்வொர்கிங்) அதாவது டீ.டி.என் என்று அழைக்கப்படும் மென்பொருளைக் கொண்டு இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் வின்ட் செர்ப், நாஸாவுடன் இணைந்து 10 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 32.4 மில்லியன் கி.மீ தொலைவில் உள்ள விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து பூமிக்கு புகைப்படங்களை பெறவோ, அல்லது இங்கிருந்து அவற்றை அனுப்புவதோ இனி சாத்தியமாகும்.
எனினும், சாதாரண இணையதளத்தில் இருந்து தகவல் அனுப்பும் முறையைப் போல் அல்லாமல் விண்வெளிக்கு தகவல் அனுப்புவது வேறுபட்டிருக்கும்.
சூரியப் புயல்கள், கிரகத்தை ஒட்டியுள்ள விண்கலம் ஆகியவற்றால் தகவல்கள் சென்றடைவதில் தாமதங்கள், இடையூறுகள் ஏற்படலாம். எனினும் தகவல் போய்ச் சேர வேண்டிய இடம் கண்டறியப்படாவிட்டாலும் அவை பாதிக்கப்படாது.
நாஸாவின் இந்த புதிய கண்டுபிடிப்பு, எதிர்காலத்தில் கிரகங்களுக்கு இடையே இணையதள சேவை அளிப்பதற்கான முன்னோடியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|