|
| ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதக்குழு அல்ல: பிரிட்டன் |
| லண்டன் (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008 ( 11:02 IST ) | |
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகள் தீவிரவாதக் குழுக்கள் அல்ல என்று பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
மேலும், இந்த இரு அமைப்புகளிலும் உறுப்பினராக உள்ளவர்கள் பிரிட்டனுக்கு வருவதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்றும் அது விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை இணையமைச்சர் லார்ட் மெல்லோச் பிரவுன் அளித்த பதிலில், 'ராஷ்டிரீய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) அல்லது பஜ்ரங்தள் அமைப்புகளை தீவிரவாத இயக்கமாக பிரிட்டன் அரசு கருதவில்லை' என்றார்.
'இவ்விரு அமைப்புகளையும் இந்திய அரசு தீவிரவாத இயக்கமாக வரையறை செய்யவில்லை. பிரிட்டன் அல்லது இந்திய அரசுகளால் அந்த இயக்கங்கள் தடை செய்யப்படவில்லை' என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், 'இந்த இரு அமைப்புகளிலும் உறுப்பினராக உள்ளவர்கள் பிரிட்டனுக்கு வருவதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை' என்று அவர் தெளிவு படுத்தினார்.
பிரிட்டன் அரசின் 2000 ஆண்டு பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே, எந்தவொரு அமைப்பின் மீதும் தடை விதிப்பது பற்றி பிரிட்டன் அரசு பரிசீலிக்கும்' என்று அமைச்சர் மெல்லோச் பிரவுன் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|