|
| இலங்கை: புலிகளின் 2 படகுகள் மூழ்கடிப்பு |
| கொழும்பு (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 18 நவம்பர் 2008 ( 12:24 IST ) | |
இலங்கை கடற்படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே இன்று காலை நடந்த பயங்கர சண்டையில் புலிகளின் 2 படகுகள் மூழ்கடிக்கப்பட்டன ; 6 புலிகள் கொல்லப்பட்டனர்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு, புலிகளின் கடற்படை தளமான பூநகரியை பிடித்த இலங்கை ராணுவம் நேற்று மாங்குளம், பணிச்சங்கேணி ஆகிய இரு நகரங்களை பிடித்தது.
இதைதொடர்ந்து, புலிகளின் முக்கிய தளமான கிளிநொச்சியை பிடிக்க ராணுவம் முன்னேறி வருகிறது. இதை தடுக்க விடுதலைப் புலிகளும் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை முல்லைத் தீவு மாவட்டம் அருகே நயாறு கடற்பகுதியில் விடுதலைப்புலிகள் 7 படகுகளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் கடுமையான தாக்குதல் நடத்தினர். புலிகளும் எதிர்தாக்குதல் நடத்தினர்.இலங்கை கடற்படைக்கு உதவியாக ராணுவ ஹெலிகாப்டரும் தாக்குதலில் ஈடுபட்டது
இதில் புலிகளின் 2 படகுகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாகவும், மற்றொரு படகு பலத்த சேதம் அடைந்ததாகவும், கடற்படை செய்தித் தொடர்பாளர் மகேஷ் கருணரத்னே தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 6 பேர் பலியானதாகவும் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த தாக்குதல் குறித்து புலிகள் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|