|
| அமெரிக்கா: இணைந்து செயல்பட ஒபாமா-மெக்கைன் உறுதி |
| வாஷிங்டன் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 18 நவம்பர் 2008 ( 11:31 IST ) | |
அமெரிக்க பொருளாதாரப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக ஒன்றுபட்டு செயல்படுவது என புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா மற்றும் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜான் மெக்கைன் இருவரும் உறுதியேற்றுள்ளனர்.
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்டவர் குடியரசுக் கட்சியை சேர்ந்த ஜான் மெக்கைன். தேர்தலில் ஒபாமா வெற்றிப் பெற்றதும் தனது தோல்வியை ஒப்புக்கொண்ட மெக்கைன், ஒபாமாவுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.
இந்நிலையில், ஒபாமாவை சிகாகோவில் உள்ள அவரது அலுவலகத்தில் ஜான் மெக்கைன் நேற்று முதன் முறையாக சந்தித்துப் பேசினார்.
அப்போது, அமெரிக்காவில் தற்போது நிலவும் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக இருவரும் ஒன்றுபட்டு செயல்படுவது என இருவரும் உறுதியேற்றனர்.
இதுதொடர்பாக, இரு தலைவர்களும் வெளியிட்ட கூட்டறிக்கை:
நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சனை, உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக இருவரும் ஒன்றுபட்டு செயல்படவுள்ளோம்.
இதுபோன்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொது மக்களும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|