|
| பிரான்ஸ் மீது தாக்குதல்: தாலிபான்கள் மிரட்டல் |
| துபாய் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 18 நவம்பர் 2008 ( 11:06 IST ) | |
ஆப்கானிஸ்தானில் இருந்து பிரான்ஸ் துருப்புகள் வெளியேறாவிட்டால், பாரிஸ் நகரில் தாக்குதல் நடத்தப்படும் என்று தாலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தாலிபான் தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட வீடியோ காட்சி, அல் அரேபியா தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தாலிபான் தீவிரவாதிகளின் ராணுவத் தலைவர் பரூக் பேசும் அந்த வீடியோக் காட்சியில், 'ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக துருப்புகளை விலக்கிக் கொள்ளாவிட்டால், பாரிசில் நடத்தப்படும் தாக்குதலுக்கு பிரான்ஸ் அரசே பொறுப்பேற்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி தெற்கு காபூலில் பிரான்ஸ் வீரர்கள் 10 பேர் கொல்லப்பட்டதற்கும் தாங்களே பொறுப்பேற்பதாக, பரூக் அப்போது அறிவித்தார்.
இந்த வீடியோ எப்போது ஒளிப்பதிவு செய்யப்பட்டது, எவ்வாறு தொலைக்காட்சி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது போன்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் 2,600 பிரான்ஸ் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|