|
| புலிகள் பதிலடி: ராணுவத்தினர் 38 பேர் பலி! |
| கொழும்பு (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 18 நவம்பர் 2008 ( 09:18 IST ) | |
இலங்கையில் கிளிநொச்சியை பிடிக்க ராணுவம் முயற்சித்துவரும் நிலையில், புலிகள் நடத்திய பதிலடித் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 38 பேர் பலியாகினர். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. புலிகளின் கடற்படை தளமான பூநகரியை, இலங்கை ராணுவம் கைப்பற்றியது.
இதை தொடர்ந்து, புலிகளின் அரசியல் தலைநகராக விளங்கும் கிளிநொச்சியை நோக்கி ராணுவம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதை தடுக்க கடுமையாக போராடிவரும் விடுதலைப் புலிகள் 'எக்காரணம் கொண்டும், கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம்' என்று சபதம் செய்துள்ளனர்.
ராணுவம் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், கடந்த 3 தினங்களாக இரு தரப்புக்கும் இடையே கடுமையான போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மாங்குளம், பணிச்சங்கேணி பகுதிகளை கைப்பற்றியுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது!
இதுகுறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கேகலிய ரம்புக்வெல கூறியதாவது:
கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக விடுதலைப் புலிகளுடன் நடந்த கடும் மோதலுக்கு பிறகு, ராணுவத்தினர் மாங்குளம் பகுதியை கைப்பற்றினர். ஒட்டிச்சுட்டான் பகுதிக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. அதோடு, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குமிழமுனை கிராமத்தையும் ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
இரு தரப்புக்கும் இடையே போர் உச்சக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விடுதலைப் புலிகள் தரப்பிலும் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி, கடந்த 3 தினங்களாக நடந்து வரும் மோதலில் புலிகள் தரப்பில் 10 பேர் பலியானதாக தெரிகிறது. ராணுவத்தின் தரப்பில் இதுவரை 38 பேர் பலியானதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|