யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஈராக்கிலிருந்து ராணுவம் வாபஸ்: ஒபாமா உறுதி
வாஷிங்டன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008   ( 13:32 IST )
ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்படும் என்று அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா உறுதியளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்று நாட்டின் புதிய அதிபராக பராக் ஒபாமா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி இவர் பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில் முதன் முறையாக தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு ஒபாமா பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

அதிபராக நான் பதவியேற்றதும், நாட்டின் பொருளாதாரத்தை சரிவுலிருந்து மீட்க முன்னுரிமை கொடுக்கப்படும். ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் ஆலோசனை நடத்தி, ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெற நடவடிக்கை எடுப்பேன்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அல் - காய்தாவினர் மீது தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும். அந்த அமைப்பின் மூளையாக செயல்பட்டு வரும் பின்லேடனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

அதே போன்று சர்ச்சைக்குரிய கவுதநாமோ சிறைச்சாலை மூடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது தாக்குதல்
கொழும்பை சென்றடைந்தது இந்திய நிவாரணக் கப்பல்
இந்தோனேஷியா கடும் நிலநடுக்கம்: சுனாமி பீதி
கிளிநொச்சியை கைப்பற்றவிட மாட்டோம்: பிரபாகரன்
பொருளாதார நெருக்கடிக்கு ஒருங்கிணைந்த திட்டம்: பிரதமர்
' 2011 ல் யு.எஸ். படை ஈராக்கிலிருந்து வாபஸ் '
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...