யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது தாக்குதல்
வாஷிங்டன் (ஏஜென்சி), 17 நவம்பர் 2008   ( 11:20 IST )
அமெரிக்காவில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மர்மான முறையில் சுட்டப்பட்டார்.

மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று படிக்கும் மாணவர்கள் மீதான தாக்குதல் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆந்திர மாநில மாணவர்கள் அதிக அளவில் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

சமீபத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த அபர்ணா ஜினகா என்ற மாணவை சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோல் கடந்த செப்டம்பரில் ஆந்திராவைச் சேர்ந்த சவுமியா, விக்ரம் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஷஷாங் குமார் என்ற மாணவர் சனிக்கிழமை இரவு மர்ம நபர்களால் சுடப்பட்டார்.

நாஷ்வில்லே பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து வரும் அவர், தனது குடியிருப்பில் இரண்டு மாணவர்களுடன் தங்கி உள்ளார். வெளியூர் செல்வதற்காக அவர் புறப்பட்டுக் கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் ஷஷாங்கின் வயிற்றில் இரண்டு குண்டுகள் பாய்ந்தன. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக, ஷஷாங்கின் நண்பர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஓராண்டில் அமெரிக்காவில் தாக்கப்படும் 6-வது ஆந்திர மாநில மாணவர் ஷஷாங் என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கொழும்பை சென்றடைந்தது இந்திய நிவாரணக் கப்பல்
இந்தோனேஷியா கடும் நிலநடுக்கம்: சுனாமி பீதி
கிளிநொச்சியை கைப்பற்றவிட மாட்டோம்: பிரபாகரன்
பொருளாதார நெருக்கடிக்கு ஒருங்கிணைந்த திட்டம்: பிரதமர்
' 2011 ல் யு.எஸ். படை ஈராக்கிலிருந்து வாபஸ் '
வாஷிங்டன்: இன்று ஜி-20 உச்சி மாநாடு!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...