|
| கொழும்பை சென்றடைந்தது இந்திய நிவாரணக் கப்பல் |
| கொழும்பு (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008 ( 10:54 IST ) | |
இலங்கை தமிழர்களுக்கு திரட்டப்பட்ட 1700 டன் நிவாரணப் பொருட்களுடன் சென்னையில் இருந்து புறப்பட்ட இந்தியக் கப்பல், நேற்றிரவு கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தது.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் நிவாரணப் பொருட்கள் திரட்டப்பட்டன.
இதன்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேலை, பெட்சீட், லுங்கி, குளியல் மற்றும் சலவை சோப்புகள்,அரிசி, பருப்பு, சர்க்கரை, ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட 1700 டன் உணவு, நிவாரணப் பொருட்கள் `கான்டிஜோர்க்' என்ற கப்பலில் ஏற்றப்பட்டு, சென்னையில் இருந்து கொழும்புக்கு கடந்த 14 ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.
நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் நேற்று நள்ளிரவு கொழும்பு துறைமுகத்தைச் சென்றடைந்ததாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவை, இந்திய தூதரகத்தின் மூலம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு வினியோகிக்கப்படும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|