யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
இந்தோனேஷியா கடும் நிலநடுக்கம்: சுனாமி பீதி
ஜகார்த்தா (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008   ( 10:41 IST )
இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

சுலவேசி மாகாணத்தில் உள்ள கோரண்டாலோ நகரில் இருந்து 135 கி.மீ. தொலைவில், 21 கி.மீ. ஆழத்தில் கடலுக்கடியில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆகப் பதிவானதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேஷியாவின் கிழக்குக் கடற்கரையின் 1000 கி.மீ. தொலைவுள்ள பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.எனினும் பின்னர் இந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

நிலநடுக்கத்தின் கடுமையானா தாக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகள், மருத்துவமனைகளில் இருந்து அலறியடித்துக் கொண்டு திறந்தவெளிப் பகுதிகளில் குழுமினர்.எனினும் இதுவரை எவ்வித உயிரிழப்பும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

இதேபோல் நேற்று நள்ளிரவிலும் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உண்டாகி, இந்தோனேஷிய மக்களை பீதியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கிளிநொச்சியை கைப்பற்றவிட மாட்டோம்: பிரபாகரன்
பொருளாதார நெருக்கடிக்கு ஒருங்கிணைந்த திட்டம்: பிரதமர்
' 2011 ல் யு.எஸ். படை ஈராக்கிலிருந்து வாபஸ் '
வாஷிங்டன்: இன்று ஜி-20 உச்சி மாநாடு!
புலிகளின் முக்கிய கடற்படை தளத்தை ராணுவம் கைப்பற்றியது
செனட் உறுப்பினர் பதவியிலிருந்து ஒபாமா ராஜினாமா!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...