யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
கிளிநொச்சியை கைப்பற்றவிட மாட்டோம்: பிரபாகரன்
கொழும்பு (ஏஜென்சி), 17 நவம்பர் 2008   ( 09:24 IST )
'பூநகரியில் இருந்து பின்வாங்கியது எங்களது போர் தந்திரம். கிளிநொச்சியை கைப்பற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அறிவித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. புலிகளின் கடற்படை தளமான பூநகரியை, இலங்கை ராணுவம் நேற்று முன்தினம் கைப்பற்றியது.

இதை தொடர்ந்து, புலிகளின் அரசியல் தலைநகராக விளங்கும் கிளிநொச்சியை நோக்கி ராணுவம் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், விடுதலைப்புலிகளின் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை நேற்று சந்தித்து பேசினர்.

அப்போது, பூநகரியில் இருந்து பின்வாங்கியது தங்களது போர் தந்திரம் என்றும், இன்னும் 3 மாதங்களில் ராணுவத்துக்கு எதிராக மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தப் போவதாகவும் அவர்களிடம் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

எக்காரணம் கொண்டும், கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர்களிடம் பிரபாகரன் சபதம் செய்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பான விபரங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் நேற்று தெரிவித்தனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பொருளாதார நெருக்கடிக்கு ஒருங்கிணைந்த திட்டம்: பிரதமர்
' 2011 ல் யு.எஸ். படை ஈராக்கிலிருந்து வாபஸ் '
வாஷிங்டன்: இன்று ஜி-20 உச்சி மாநாடு!
புலிகளின் முக்கிய கடற்படை தளத்தை ராணுவம் கைப்பற்றியது
செனட் உறுப்பினர் பதவியிலிருந்து ஒபாமா ராஜினாமா!
ஜி- 20 மாநாடு: பிராங்க்பர்ட்டில் மன்மோகன்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...