யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பொருளாதார நெருக்கடிக்கு ஒருங்கிணைந்த திட்டம்: பிரதமர்
உலக நாடுகள் தற்போது சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஒருங்கிணைந்த திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

உலகளாவிய அளவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து விவாதிப்பதற்காக ஜி- 20 நாடுகளின் மாநாட்டை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூட்டினார்.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன்னில் வெள்ளி மற்றும் சனிக்கிழமையன்று நடந்த இம்மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன், பிரான்ஸ் அதிகர் நிகோலஸ் சர்கோசி, ஜப்பான் பிரதமர் தரா ஆசொ உட்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன், தற்போதைய பொருளாதார
நெரு‌க்கடி‌க்கு வள‌ரு‌ம் நாடுக‌ள் காரணம‌ல்ல. எனினும் இதனால் அவையும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.

இப்பிரச்னைக்கு ப‌தில‌ளி‌க்க‌க் கூ‌டிய வகை‌யிலு‌ம், ந‌ம்‌பி‌க்கை அளிக்கும் வகையிலும் பொருளாதார நெரு‌க்கடியை‌க் கையா‌ள்வது கு‌‌றி‌த்த தெ‌ளிவாக முடிவுகளை உல‌கி‌ற்கு தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய மன்மோகன்சிங், பொருளாதார நெரு‌க்கடி‌க்கு‌க் காரணமான க‌ண்கா‌ணி‌ப்பு முறை, ஒழு‌ங்குமுறை‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்ட தோ‌ல்‌விகள் கு‌றி‌த்து ஆராய வே‌‌ண்டு‌ம் என்றார்.

பன்னாட்டு நிதியம் (ஐஎம்எப்), உலக வங்கி ஆகியவற்றை, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள நாடுகளின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நிதியமைப்புகளாக மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் என்று பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.

உலகளவில் ஏற்பட்டுள்ள பின்னடைவை தடுத்து நிறுத்தி, பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஒருங்கிணைந்த செய‌ல் திட்டம் வகுக்க உலக‌த் தலைவ‌ர்க‌ள் மு‌ன்வர வே‌ண்டு‌ம் என்று மன்மோகன்சிங் கேட்டுக் கொண்டார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
' 2011 ல் யு.எஸ். படை ஈராக்கிலிருந்து வாபஸ் '
வாஷிங்டன்: இன்று ஜி-20 உச்சி மாநாடு!
புலிகளின் முக்கிய கடற்படை தளத்தை ராணுவம் கைப்பற்றியது
செனட் உறுப்பினர் பதவியிலிருந்து ஒபாமா ராஜினாமா!
ஜி- 20 மாநாடு: பிராங்க்பர்ட்டில் மன்மோகன்
ஆப்கான் அதிபருடன் பாக். அதிபர் பேச்சுவார்த்தை
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...