யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
வாஷிங்டன்: இன்று ஜி-20 உச்சி மாநாடு!
வாஷிங்டன் (ஏஜென்சி), சனிக்கிழமை, 15 நவம்பர் 2008   ( 13:43 IST )
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிப்பதற்காக, ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது.

கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வல்லரசான அமெரிக்காவும் இதில் தப்பவில்லை.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிப்பதற்காக ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டை, அமெரிக்க அதிபர் புஷ் கூட்டியுள்ளார்.

வாஷிங்டனில் இன்று தொடங்கும் இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில், 'பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதில், வளரும் நாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தவுள்ளதாக தெரிகிறது.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் உள்பட உலகளவிலான முக்கியத் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
புலிகளின் முக்கிய கடற்படை தளத்தை ராணுவம் கைப்பற்றியது
செனட் உறுப்பினர் பதவியிலிருந்து ஒபாமா ராஜினாமா!
ஜி- 20 மாநாடு: பிராங்க்பர்ட்டில் மன்மோகன்
ஆப்கான் அதிபருடன் பாக். அதிபர் பேச்சுவார்த்தை
அமை‌தி‌ப் பே‌ச்சுக்கு தயா‌ர்: தா‌லிபா‌ன் அறிவிப்பு!
பாக்.கில் ஈரான் தூதர் கடத்தல்: பாதுகாவலர் சுட்டுக்கொலை!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...