யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
புலிகளின் முக்கிய கடற்படை தளத்தை ராணுவம் கைப்பற்றியது
கொழும்பு(ஏஜென்சி), 15 நவம்பர் 2008   ( 13:42 IST )
விடுதலைப் புலிகளின் முக்கிய கடற்படை தளமாகருதப்படும் பூநகரியை கைப்பற்றிவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.

வடக்கு இலங்கையில் உள்ள பூநகரியை நகருக்குள் ராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவு இன்று காலை கைப்பற்றிவிட்டதாக இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால், இது தொடர்பாக மேற்கொண்டு விவரங்கள் எதையும் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

ராணுவத்தின் மிக முக்கியத் தளமாக விளங்கிய பூநகரியை நகரை கடந்த 1993 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தி கைப்பற்றினர்.அப்போது முதல் இது புலிகள் வசமே இருந்து வந்தது.

இந்நிலையில், இந்தப் பகுதியை இலங்கை ராணுவம் தற்போது தாக்குதல் நடத்தி மீட்டுள்ளது.

பூநகரியை நகரை பிடித்துள்ளதால் வட மேற்கு கடல் பகுதி தற்போது,ராணுவத்தின் வசமாகியுள்ளது.

இதுவரை யாழ்ப்பாணத்துக்கு படைகளையும், பொருட்களையும் வான்வெளி மார்க்கமாகவே அனுப்பி வந்த ராணுவத்திற்கு தற்போது யாழ்ப்பாணத்தை அடைய புதிய பாதை கிடைத்துள்ளது.

பேய்முனை மற்றும் வலைப்பாடு ஆகிய கிராமங்களை புலிகளிடம் இருந்து பிடித்து விட்டதாக ராணுவம் நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
' 2011 ல் யு.எஸ். படை ஈராக்கிலிருந்து வாபஸ் '
வாஷிங்டன்: இன்று ஜி-20 உச்சி மாநாடு!
செனட் உறுப்பினர் பதவியிலிருந்து ஒபாமா ராஜினாமா!
ஜி- 20 மாநாடு: பிராங்க்பர்ட்டில் மன்மோகன்
ஆப்கான் அதிபருடன் பாக். அதிபர் பேச்சுவார்த்தை
அமை‌தி‌ப் பே‌ச்சுக்கு தயா‌ர்: தா‌லிபா‌ன் அறிவிப்பு!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...