|
| ஜி- 20 மாநாடு: பிராங்க்பர்ட்டில் மன்மோகன் |
| பிராங்க்பர்ட்/ புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008 ( 11:44 IST ) | |
அமெரிக்காவில் நடைபெறும் ஜி- 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் வழியில் ஜெர்மனில் உள்ள பிராங்க்பர்ட் நகரை பிரதமர் மன்மோகன் சென்றடைந்தார்.
உலகளாவிய பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிப்பதற்காக அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன்னில் இன்றும், நாளையும் ஜி- 20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். வாஷிங்டன் நகருக்குச் செல்லும் வழியில் ஜெர்மனில் உள்ள பிராங்பர்ட் நகரை பிரதமர் இன்று காலை சென்றடைந்தார்.
பிரதமருடன் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அஷோக் சாவ்லா உள்ளிட்ட உயர்மட்டக் குழுவும் சென்றுள்ளது.
முன்னதாக, வாஷிங்டன்னுக்கு புறப்படும் முன் டெல்லி பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், 'உலகளாவிய பொருளாதார நெருக்கடி தொடர்பாக உலக தலைவர்களுடன் பேசுவதற்கான வாய்ப்பாக இந்த மாநாடு அமையும்' என்றார்.
இம்மாநாட்டில் நிதி நெருக்கடியை தடுத்தல், எதிர்மறையான பொருளாதார விளைவுகளை போக்குதல் குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்த மன்மோகன், இத்தகைய நிலை வருங்காலத்தில் ஏற்படாமல் இருக்க ஜி- 20 உச்சி மாநாடு முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|