யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஆப்கான் அதிபருடன் பாக். அதிபர் பேச்சுவார்த்தை
நியூயார்க் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008   ( 16:20 IST )
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாயுடன் பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் அலி ஜர்தாரி நியூயார்க்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நியூயார்க் வந்த ஜர்தாரி, ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாய் மற்றும் சவூதி மன்னர் அப்துல்லா ஆகியோருக்கு இடையே தனியறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின்போது, சவூதி அரசின் மத்தியஸ்த்துடன் தாலிபான் இயக்கத்துடன் அமைதி பேச்சுவார்த்தையை தொடர்வது என்று மூன்று நாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொள்வதாக தாலிபான் ஒப்புக் கொண்டதன் பேரிலேயே அந்த அமைப்புடன் பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினார்.

இதனிடையே இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டுவிட்டு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கண்டலீஸா ரைஸுடனும் பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி சுமார் 20 நிமிடங்கள் பேச்சு நடத்தினார்.

அப்போது ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தாலிபான் மற்றும் அல் - காய்தாவினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அமெரிக்க படையின் தாக்குதலில் தீவிரம் கூடாது என்று ஜர்தாரி வலியுறுத்தியதாக தெரிகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அமை‌தி‌ப் பே‌ச்சுக்கு தயா‌ர்: தா‌லிபா‌ன் அறிவிப்பு!
பாக்.கில் ஈரான் தூதர் கடத்தல்: பாதுகாவலர் சுட்டுக்கொலை!
' ஜி 20 மாநாடு : ஒபாமா பங்கேற்க மாட்டார் '
ஈராக் : கார் குண்டு வெடித்து 3 பேர் பலி
பாக்.கில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி
ஆப்கனில் அமெரிக்க பத்திரிகையாளர் கடத்தல்!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...