யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
புலிகள் போர் நிறுத்த அறிவிப்பு ; இலங்கை அரசு பதில்
கொழும்பு (ஏஜென்சி), திங்கள்கிழமை, 10 நவம்பர் 2008   ( 15:44 IST )
விடுதலைப் புலிகள் முதலில் தங்களது யுதங்களை கீழே போட்டால்தான் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை தொடங்க முடியும் என்று லங்கை அரசு பதிலளித்துள்ளது.

இலங்கையில் இரண்டு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய முன்வர வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் வலியுறுத்தியதையடுத்து,போர் நிறுத்தம் செய்யத் தயாராக உள்ளதாக விடுதலைப் புலிகள் நேற்று அறிவித்தனர்.

இதுகு‌றி‌த்து விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறு‌ப்பாள‌ர் நடேசன் கூறுகையில், "நாங்கள் போர் நிறுத்தத்தையே விரும்புகிறோம்.போர் நிறுத்தம் செய்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.

ஆனால், ஏற்கனவே போர் நிறுத்தம் அமலில் இருந்தபோது, ஒப்பந்தத்தை மீறி இலங்கைதான் மீண்டும் சண்டையை ஆரம்பித்தது. எனவே நாங்கள் தற்காப்பு போர் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே, இலங்கை அரசையும் போர் நிறுத்தம் செய்ய வற்புறுத்த வேண்டும்" என்று வலியுறுத்திருந்தார்.

இந்நிலையில், புலிகளின் இந்த அறிவிப்பு குறித்து பதிலளித்துள்ள இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் ராம்புக்வெல்லா, " ஆயுதங்களுடன் இருக்கும் புலிகளை எங்களால் நம்ப முடியாது.இதற்கு முன்னர் போர் நிறுத்தம் அமலில் இருந்தபோது தங்களை பலப்படுத்திக் கொள்வதற்காக புலிகள் அதனை பயன்படுத்திக் கொண்டனர்.

இது விஷயத்தில் இலங்கை அரசுக்கு போதுமான முன்அனுபவம் உள்ளது.எப்போபெல்லாம் புலிகள் ராணுவ ரீதியாக பலவீனமடைகிறார்களோ அப்போதெல்லாம் அவர்கள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பார்கள்;அவ்வாறு போர் நிறுத்தம் அமலில் இருக்கும் காலத்திற்குள் அவர்கள் தங்களை பலப்படுத்திக் கொள்வார்கள்.

எனவே விடுதலைப் புலிகள் முதலில் தங்களது யுதங்களை கீழே போட்டால்தான் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை தொடங்க முடியும் " என்று கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சீனாவில் கடும் நிலநடுக்கம்
பிரிட்டனில் தாக்குதல் நடத்த அல்-கொய்தா திட்டம்!
அமெ‌ரி‌க்கா‌வி‌ல் வேலை‌யி‌ல்லா‌த் ‌தி‌ண்டா‌ட்ட‌ம் அ‌திக‌ரி‌ப்பு
ஹைட்டியனில் பள்ளி கட்டடம் இடிந்து 47 பேர் பலி!
அமெரிக்க பொருளாதாரத்தை சீர்படுத்த முன்னுரிமை : ஒபாமா
ராணுவ ஒதுக்கீட்டை அதிகரித்தது இலங்கை
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...