|
| பிரிட்டனில் தாக்குதல் நடத்த அல்-கொய்தா திட்டம்! |
| லண்டன் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 9 நவம்பர் 2008 ( 15:12 IST ) | |
பிரிட்டனில் மிகப்பெரிய தீவிரவாதத் தாக்குதல் நடத்த அல்-கொய்தா திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக, பிரிட்டன் உளவுத்துறை பாதுகாப்பு அமைச்சகத்திடம் அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரிட்டனில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது. லண்டன், பிர்மிங்காம் மற்றும் லுடன் நகரங்களில் இந்த தாக்குதல் நடத்தப்படலாம்.
தீவிரவாதிகளின் இலக்கு பிரிட்டன் நாடாளுமன்றம், வொய்ட்ஹால், பக்கிங்ஹாம் மற்றும் செயின்ட் ஜேம்ஸ் மாளிகைகள் போன்றவைகளாக இருக்கலாம்.
தீவிரவாதிகளின் 'ஹிட்-லிஸ்ட்'டில் பிரிட்டன் எப்போதுமே இடம்பிடித்து வருகிறது. எதிர்காலத்தில் இந்த அபாயம் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தீவிரவாதிகளில் குறிவைத்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இடங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|