|
| ஹைட்டியனில் பள்ளி கட்டடம் இடிந்து 47 பேர் பலி! |
| பெய்ட்டோன்வில்லி(ஏஜென்சி), 8 நவம்பர் 2008 ( 13:23 IST ) | |
ஹைட்டியன் தலைநகர் போர்ட்-ஆ-பிரின்ஸ் அருகே உள்ள பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் ஏராளமான குழந்தைகள் உள்பட 47 பேர் பலியாகினர்.
போர்ட்-ஆ-பிரின்ஸின் புறநகர்ப் பகுதியான பெடியான்-வில்லியில் செயல்பட்டு வந்த ஷான்டி டவுன் பள்ளியில், நேற்று காலை 10 மணியளவில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்குள் இருந்த போது, திடீரென பள்ளி கட்டடம் இடிந்து விழுந்தது.
நேற்று மாலை வரை நடந்த மீட்புப் பணிகளின் முடிவில் 47 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்றும் மீட்பு பணி அதிகாரி ஒருவர் கூறினார்.
இடிபாடுகளில் மேலும் பல குழந்தைகள் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சபடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதே சமயம் இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகளில் பலர் உயிருடன் இருப்பதால், மீட்புப் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், பல குழந்தைகள், ஆசிரியர்கள் உயிருடன் மீட்கப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று முதல் இருபது வயது வரையுள்ள 700 மாணவர்கள் பயின்று வரும் இப்பள்ளியில், கட்டிடம் இடிந்த சமயத்தில் எத்தனை மாணவர்கள் இருந்தனர் என்பது குறித்த உறுதியான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|