யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
அமெரிக்க பொருளாதாரத்தை சீர்படுத்த முன்னுரிமை : ஒபாமா
சிகாகோ (ஏஜென்சி), சனிக்கிழமை, 8 நவம்பர் 2008   ( 11:29 IST )
முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மெரிக்காவில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியை சீர்படுத்துவதற்கு தாம் முதல் முன்னுரிமை அளிக்கப் போவதாக அந்நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் சாதனை வெற்றியைப் பெற்ற பின் ஒபாமா தனது சொந்த மாகாணமான சிகாகோவில், இன்று அதிகாலை செய்தியாளர்களுக்கு முதன்முறையாக பேட்டியளித்தார்.

அப்போது மேற்கண்டவாறு கூறிய ஒபாமா, பொருளாதார நெருக்கடிக்கு உரிய முறையில் தீர்வு கண்டு, அதனை நிலை நிறுத்துவேன் என்றும்,அமெரிக்கா எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி சவால்களை தீர்ப்பதே தனது உடனடி முக்கியத்துவம் என்றும் தெரிவித்தார்.

தனது தலைமையிலான புதிய அரசு பொருளாதார நெருக்கடிக்கு உடனடி முன்னுரிமை அளித்து செயல்படும் என்றும், ஏற்கனவே தாம் தேர்தல் பிரசாரத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின்படி உரிய முறையில் செயலாற்றப் போவதாகவும் ஒபாமா உறுதியளித்தார்.

நிதி நெருக்கடியால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சிறிய நிறுவனங்களுக்கு உதவுவதுடன், நடுத்தர அமெரிக்கர்களுக்கும் உதவ வேண்டியது அவசியம் என்றார்.

தவிர, நிதிநெருக்கடியை எதிர்கொள்ளவும், அதனை சீர்படுத்தவும் தனது பொருளாதார ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் ஒபாமா மேலும் தெரிவித்தார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ராணுவ ஒதுக்கீட்டை அதிகரித்தது இலங்கை
பாகிஸ்தானில் இரட்டை தற்கொலை தாக்குதல் : 19 பேர் பலி
இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் ஒபாமா!
ஒபாமாவின் ஆலோசகர் ஓர் இந்தியர்!
வ‌ன்‌னி‌யி‌ல் 20,000 குடு‌ம்ப‌ங்கள் தவிப்பு : ஐ.நா
வங்கதேசம் திரும்பினார் ஹசீனா: தேர்தலில் போட்டி!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...