யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ராணுவ ஒதுக்கீட்டை அதிகரித்தது இலங்கை
கொழும்பு (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008   ( 14:55 IST )
ராணுவத்திற்கான ஒதுக்கீட்டை இலங்கை அரசு அதிகரித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று ராணுவத்திற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அதிபர் ராஜ பக்சே, ராணுவத்திற்கான ஒதுக்கீடு 7 சதவீதம் அதிகரிக்கப்படுவதாக தெரிவித்தார்.

அதன்படி ராணுவத்திற்கு 1.6 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்படுவதாக கூறிய ராஜ பக்சே,புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்புமாறும் இந்த கடைசி தருணத்தில் கூட தாம் வேண்டுகோள் விடுப்பதாகவும், அவ்வாறு அவர்கள் ஆயுதங்களை கீழே போடாவிட்டால் அவர்கள் ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

பயங்கரவாததால் பாதிப்புக்குள்ளான உள்கட்டமைப்பையும், சமூகத்தையும் மீண்டும் நிர்மாணிப்பதற்காக பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஒரு சதவீத கூடுதல் வரி விதிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.

நாட்டின் பணவீக்கம் கடந்த மாத இறுதியில் 23.4 சதவீதமாக அதிகரித்துவிட்டதாகவும், இந்த ஆண்டின் வளர்ச்சி விகிதம் முந்தைய ஆண்டில் காணப்பட்ட 6.8 சதவீதத்திலிருந்து 0.5 சதவீதம் குறைந்து 6.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

புலிகளின் ஆதிக்கத்திலிருந்து வடக்கை ராணுவம் வேகமாக மீட்டு வருகிறது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளை ராணுவம் மீட்டு விட்டது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது சந்தோஷம் தருகிறது. நமது நம்பிக்கைகள் வேகமான முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றன என்று மேலும் கூறினார் ராஜ பக்சே.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாகிஸ்தானில் இரட்டை தற்கொலை தாக்குதல் : 19 பேர் பலி
இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் ஒபாமா!
ஒபாமாவின் ஆலோசகர் ஓர் இந்தியர்!
வ‌ன்‌னி‌யி‌ல் 20,000 குடு‌ம்ப‌ங்கள் தவிப்பு : ஐ.நா
வங்கதேசம் திரும்பினார் ஹசீனா: தேர்தலில் போட்டி!
பூடானில் புதிய மன்னர் முடிசூடினார்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...