|
| பூடானில் புதிய மன்னர் முடிசூடினார் |
| திம்பு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 6 நவம்பர் 2008 ( 11:33 IST ) | |
பூடான் நாட்டின் ஐந்தாவது மன்னராக ஜிக்மே கேசர் நாம்கெல் இன்று காலை முடிசூடப்பட்டார்.
இமயமலை அடிவாரத்தில் உள்ள சின்னஞ்சிறு நாடு பூடான். சுமார் 6 லட்சம் மக்கள் தொகை கொண்ட இங்கு, இன்று வரை மன்னராட்சி நடைமுறையில் உள்ளது.
மன்னராட்சிக்கு எதிராக ஜனநாயகம் கோரி மக்கள் போராடி வரும் இக்காலத்தில், பூடான் மக்கள் மன்னராட்சி மீது தான் விருப்பம் கொண்டுள்ளனர். பூடான் மன்னர் ஜிக்மே சிங்கே வாஞ்சுக் தனது அதிகாரத்தை குறைத்துக் கொண்டு மக்களுக்கு ஜனநாயகத்தை அளிக்க விரும்பினார். ஆனால், அவரை தொடர்ந்து அரியணையில் இருக்கும்படி மக்கள் அன்புடன் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து தனது மகனுக்கு அரியணையை வழங்கும் பொருட்டு 2006-ல் மன்னர் ஜிக்மே சிங்கே முடி துறந்தார். எனினும், இளவரசராக இருந்த ஜிக்மே கேசர் படித்துக் கொண்டிருந்ததால் அவர் அரியணை ஏறுவது தாமதமானது.
இந்நிலையில் பூடானின் 5-வது மன்னராக ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக் இன்று காலை 8.30 மணியளவில் அரியணை ஏறினார்.
தலைநகர் திம்புவில் நடந்த வண்ணமிகு நிகழ்ச்சியில், ஜிக்மே சிங்கேவின் 5 மகன்களில் மூத்தவரான ஜிக்மே கேசர் மகுடம் சூட்டப்பட்டார்.இதன் பின்னர் தங்க சிம்மாசனத்தில் அவர் அமரவைக்கப்பட்டார்.
இந்த கோலாகல நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு வெளிநாட்டு தூதர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முடிசூடப்பட்ட மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல், இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். மன்னருக்கு 5 மகன்கள், 5 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்தவர் ஜிக்மே கேசர் நாம்கெல் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|