யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஒபாமா வெற்றி: புஷ், ஹிலாரி வாழ்த்து!
வாஷிங்டன் (ஏஜென்சி), புதன்கிழமை, 5 நவம்பர் 2008   ( 17:22 IST )
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள கறுப்பினத் தலைவர் பராக் ஒபாமாவுக்கு, தற்போதைய அதிபர் புஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டாப்னா பெரினோ கூறியதாவது:

தேர்தலில் வெற்றி பெற்ற தகவலறிந்ததும் ஒபாமாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு அதிபர் புஷ் வாழ்த்து தெரிவித்தார். ஒபாமாவின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக புஷ் கூறினார்.

அதிபர் பதவியை சுமூகமான முறையில் ஒபாமாவிடம் ஒப்படைப்பதாக உறுதிளித்த புஷ், இனி அவரது வாழ்க்கைப் பயணம் மகிழ்ச்சியாக அமையவும் வாழ்த்து தெரிவித்தார்.

அதோடு, விரைவில் வெள்ளை மாளிகைக்கு வரும்படியும் ஒபாமாவுக்கு புஷ் அழைப்பு விடுத்தார். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோன்று, ஒபாமாவுக்கு முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஒபாமாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அவர், ஒபாமாவின் பாட்டி மரணத்திற்கு இரங்கலும் தெரிவித்ததாக அவரது செய்தித் தொடர்பாளர் பிலிப் ரீனஸ் கூறியுள்ளார்.

தேர்தலில் தனக்கு ஆதரவு அளித்ததற்காக ஹிலாரிக்கும், முன்னாள் அதிபர் கிளிண்டனுக்கும் ஒபாமா நன்றி தெரிவித்தார்.

ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்காக நடந்த வேட்பாளர் தேர்தலில், ஒபாமாவுக்கு எதிராக போட்டியிட்ட ஹிலாரி பின்னர் போட்டியிலிருந்து விலகினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சாமானியனாக இருந்து அதிபராக உயர்ந்த ஒபாமா
அமெரிக்காவில் மாற்௦றங்கள் : ஒபாமா பேச்சு
அதிபர் தேர்தலில் ஒபாமா அபார வெற்றி
முதல் வாக்குப்பதிவில் ஒபாமாவுக்கு வெற்றி
காஷ்மீர் பிரச்னையில் ஐ.நா. தலையிடாது: பான் கி மூன்
போரை நிறுத்த இந்தியா கோரவில்லை : ராஜ் பக்சே
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...