யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
சாமானியனாக இருந்து அதிபராக உயர்ந்த ஒபாமா
வாஷிங்டன் (ஏஜென்சி), புதன்கிழமை, 5 நவம்பர் 2008   ( 14:03 IST )
அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் என்ற புதிய வரலாற்றைப் படைத்துள்ள பராக் ஹுசேன் ஒபாமா, சாமானியானாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி இன்று உலகில் அதிக அதிகாரம் கொண்டவர் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளார்.

கடந்த 1961 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி, அமெரிக்காவின் ஹாவாயில் உள்ள ஹொனுலூலுவில் பிறந்தார் ஒபாமா. தந்தை பராக் ஒபாமா சீனியர், கென்யாவைச் சேர்ந்த கறுப்பினத்தவர். தாய் ஆன் துன்காம் அமெரிக்க வெள்ளையர் ஆவார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள்.

1983-ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (சர்வதேச அரசியல்) பட்டம் முடித்த கையோடு, ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தார். 1990-ல் ஆப்ரிக்க- அமெரிக்க சட்ட மதிப்பீட்டுக் குழுவின் தலைவராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹார்வர்ட் சட்டக் கல்லூரி மாணவியான மிச்செல்லா ராபின்சனை, 1992 ஆம் ஆண்டு அக்டோபர் 18-ல் ஒபாமா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மாலியா, சாஷா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

கடந்த 1991-ல் சிகாகோவில் சிவில் உரிமை வழக்கறிஞராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினர் ஒபாமா. அதிபர் தேர்தலில் சிகாகோவில் கிளிண்டன் அதிக வாக்குகள் பெற ஒபாமாவின் கடும் உழைப்பும் முக்கியமானது.

இதன் பின்னர் இல்லினாஸ் மாகாணத்தின் செனட்டராக 1996, 1998 மற்றும் 2002 ஆம் ஆண்டில் ஒபாமா தேர்வு செய்யப்பட்டார். 2004 ஆண்டு ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து ஒபாமா ஆற்றிய உரை, அமெரிக்கர்கள் அனைவரது கவனத்தை ஈர்த்தது.

கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களில் ஒருவராக ஒபாமாவும் அறிவிக்கப்பட்டார். இவ்வாண்டு ஜூன் 3 ஆம் தேதி அக்கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளராக தேர்வுசெய்யப்பட்டார்.

அமெரிக்காவின் 44-வது அதிபராகவும், முதல் கறுப்பின அதிபர் என்ற சிறப்பையும் பெற்றுள்ள ஒபாமா சாமானியனாக இருந்து தனது கடின உழைப்பின் மூலம் இன்று அதிபர் என்ற உச்ச நிலையை எட்டியுள்ளார்.

வரும் 2008 ஜனவரி 20 ஆம் தேதி வாஷின்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில், அதிபராக ஒபாமா பதவி ஏற்றுக் கொள்வார். துணை அதிபராக ஜனநாயக கட்சியின் ஜோசப் ஆர். பிடேன் பொறுப்பேற்ப்பார்.

தற்போது அமெரிக்காவில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி, ஈராக்- ஆப்கான் விவகாரம் உள்ளிட்டவை வர் முன் உள்ள சவாலான விஷயங்கள். எதை எவ்வாறு ஒபாமா எதிர்கொள்வார் என்பதை உலகமே ஆவலுடன் கவனிக்கிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அமெரிக்காவில் மாற்௦றங்கள் : ஒபாமா பேச்சு
அதிபர் தேர்தலில் ஒபாமா அபார வெற்றி
முதல் வாக்குப்பதிவில் ஒபாமாவுக்கு வெற்றி
காஷ்மீர் பிரச்னையில் ஐ.நா. தலையிடாது: பான் கி மூன்
போரை நிறுத்த இந்தியா கோரவில்லை : ராஜ் பக்சே
யு.எஸ். அதிபர் தேர்தல் துவங்கியது: ஒபாமாவுக்கு வெற்றி?
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...