|
| அமெரிக்காவில் மாற்௦றங்கள் : ஒபாமா பேச்சு |
| சிகாகோ (ஏஜென்சி), 5 நவம்பர் 2008 ( 11:57 IST ) | |
"அமெரிக்காவில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிக்கிறது" என்று அதிபர் தேர்தலில் தான் வெற்றிப் பெற்றிருப்பதை பற்றி கருத்து தெரிவித்துள்ளார் பராக் ஒபாமா.
அமெரிக்க அதிபர் தேர்தலில் அமோக வெற்றிப்பெற்று, புதிய வரலாறு படைத்துள்ளார் கறுப்பினத்தை சேர்ந்தவரான பராக் ஒபாமா.
தேர்தலில் தனது வெற்றி உறுதி செய்யப்பட்டதும் சிகாகோ நகரில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார் ஒபாமா.
அமெரிக்காவில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதில் சந்தேகம் உள்ள சிலருக்கும், ஜனநாயகம் மீது கேள்வி எழுப்பியவர்களுக்கும் இன்றைய தேர்தல் வெற்றி மூலம் நீங்கள் (மக்கள்) பதிலளித்துள்ளீர்கள்.
இந்த வெற்றி, அமெரிக்காவின் பல்வேறு பள்ளிகள், கிறிஸ்தவ தேவாலயங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த மக்களின் பதிலாகும். இளையோர், முதியோர், ஏழை, பணக்காரன், ஹிஸ்பானிக், ஆசியர்கள், குடியரசு, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக அளித்த பதில் இது.
இதன் மூலம், நாமெல்லாம் அமெரிக்கர்கள். இனியும் அமெரிக்கர்களாக இருப்போம் என்ற செய்தியை உலகுக்கு நாம் உணர்த்தியுள்ளோம்.
நீண்ட காலமாகி விட்டாலும், இன்று, இத்தேர்தலில் நாம் ஏற்படுத்திய தாக்கம் மூலம், அமெரிக்கா மாறிக்கொண்டிருக்கிறது. .
சக போட்டியாளரான குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார். இத்தேர்தலில் மிகக் கடுமையாக அவர் போராடினார். அவருக்கு எனது பாராட்டுக்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ஒபாமாவுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் இதுகுறித்து தனது ஆதரவாளர்களிடம் பேசியதாவது:
"ஒபாமாவுக்கும், எனக்கும் கொள்கை ரீதியில் கருத்து வேறுபாடுகள் உண்டு.ஆனால், நாட்டின் நலனுக்காக அவருக்கு எனவு ஆதரவு உண்டு.
அமெரிக்காவில் முதன் முதலாக கறுப்பினத் தலைவர் ஒருவர் அதிபராவதன் மூலம், நாட்டில் நீண்டகாலமாக கறுப்பின மக்களுக்கு எதிராக நிலவிய அநீதி முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்கர்கள் வரலாறு படைப்பவர்கள். அதுபோன்று ஒபாமாவும் புதிய வரலாறு படைத்துள்ளார். அவருக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|