|
| நவாஸ் ஷெரீப் உயிருக்கு தாலிபான்கள் குறி |
| இஸ்லாமாபாத்(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2008 ( 16:25 IST ) | |
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கொல்ல தாலிபான்கள் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஷீத் அக்பர் நவானியின் வீடு மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது.
இது குறித்த விசாரணையை பாகிஸ்தான் உளவு அமைப்பு மேற்கொண்டபோது, நவாஸ் செரீப்பையும், அவரது சகோதரர் ஷாபாஸ் செரீப்பையும் கொலை செய்ய,பாகிஸ்தான் தாலிபான் தலைவர் பைத்துல்லா மெசூத் திட்டமிட்டது தெரியவந்திருப்பதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
செரீப் சகோதரர்களின் நடவடிக்கைகளை லாகூரில் தங்கியிருந்த மெசூத்தின் கூட்டாளி உபயதுல்லா கண்காணித்து வந்ததாகவும், தாலிபான்களின் இந்த தாக்குதல் திட்டத்தைத் தொடர்ந்து நவாஷ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|