யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
அல்போன்ஸாவுக்கு புனிதர் பட்டம் வழங்கினார் போப்
வாடிகன் / திருவனந்தபுரம் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2008   ( 16:05 IST )
வாடிகன் நகரில் இன்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் ந்தியாவைச் சேர்ந்மறைந்த ன்னியாஸ்திரீ அல்போன்ஸாவுக்கு புனிதர் பட்டத்தை போப்பாண்டவர் 16 ஆவது பென்டிக்ட் வழங்கினார்.

கேரள மாநிலம் கோட்டயத்தில் கடந்த 1910 ஆம் ஆண்டில் பிறந்தவர் அல்போன்ஸா.இவர் பிறந்த 3 மாதத்திலேயே தனது தாயை இழந்தார்.அதன் பின்னர் சிறுவயதிலிருந்தே பல்வேறு இன்னல்களை சந்தித்த அவர், இறைப்பணியில் ஈடுபாடு கொண்டு துறவறம் பூண்டார்.

தனது 17 ஆவது வயதில் பாரநங்கனம் கன்னியாஸ்திரீ மடத்தில் சேர்ந்த அவர், அங்கேயே தனது ஆயுட் காலம் முழுவதும் அல்லல்படுபவர்களுக்கு சேவையாற்றினார்.

அயராது இறைப்பணியிலும், தொண்டிலும் ஈடுபட்ட அல்போன்ஸா, கடந்த 1946 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

ஆனால் அவரது மறைவிற்கு பின்னரும் அவரால் அற்புதங்கள் நிகழப்பெற்றவர்கள் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் அவருக்கு இன்று புனிதர் பட்டம் வழங்கப்படும் என வாடிகன் அறிவித்திருந்தது.

அதன்படி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமான வாடிகனில் இன்று இந்திய நேரப்படி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அல்போன்ஸாவுக்கு புனிதர் பட்டத்தை வழங்கினார் போப்.அல்போன்ஸா தவிர மேலும் மூவருக்கும் அவர் புனிதர் பட்டத்தை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அல்போன்ஸாவின் சொந்த மாநிலமான கேரளாவிலிருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியையொட்டிய பிரார்த்தனை பாரநங்கனம் தேவாலயத்தில் நேரடியாக ஒளிபரப்பானதை ஏராளமான கிறிஸ்தவர்கள் கண்டு மகிழ்ச்சியுற்றனர்.இந்த நிகழ்ச்சியையொட்டி கேரள மாநிலம் முழுவதுமுள்ள தேவாலயங்களிலும் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'யு.எஸ். - பாக். அணுசக்தி ஒப்பந்தத்தை இந்தியா எதிர்க்காது'
பாக்.கில் தற்கொலைப்படை தாக்குதல்: 16 பேர் பலி
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்
அணுசக்தி ஒப்பந்தம்: பிரணாப் - ரைஸ் கையெழுத்திட்டனர்
பின்லாந்து முன்னாள் அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
அணுசக்தி: பிரணாப்- ரைஸ் இன்று கையெழுத்து!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...