யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
'யு.எஸ். - பாக். அணுசக்தி ஒப்பந்தத்தை இந்தியா எதிர்க்காது'
வாஷிங்டன் (ஏஜென்சி), 11 அக்டோபர் 2008   ( 17:11 IST )
அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுவதை இந்தியா எதிர்க்காது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கண்டலீசா ரைஸ் உடன் இணைந்து கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்த பிரணாப், அணுசக்தியை அமைதிக்காக பயன்படுத்தினால், சிவில் அணுசக்தி ஒத்துழைப்பை இந்தியா ஊக்குவிக்கும் என்றார்.

இந்தியாவைப் போன்றே தங்களிடனும் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் கோரியுள்ளதைப் பற்றி கேட்டபோது, அமைதியான பயன்பாட்டிற்காக அணுசக்தியை பயன்படுத்த ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உள்ளது என பதிலளித்தார் பிரணாப்.

அமெரிக்காவுடனான இந்திய அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் அச்சம் தெரிவித்துள்ளதே எனக் கேட்டபோது, பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும், அந்நாட்டுடன் தீர்க்கப்படாமல் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க இந்தியா முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறினார் பிரணாப்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாக்.கில் தற்கொலைப்படை தாக்குதல்: 16 பேர் பலி
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்
அணுசக்தி ஒப்பந்தம்: பிரணாப் - ரைஸ் கையெழுத்திட்டனர்
பின்லாந்து முன்னாள் அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
அணுசக்தி: பிரணாப்- ரைஸ் இன்று கையெழுத்து!
இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...